Annadhanam Activities
Pournami • Girivalam • Deepam Festival • Tiruvannamalai
Annadhanam Activities in Tiruvannamalai
Sri Arunachala Annadhana Trust continues its sacred service of feeding devotees visiting Tiruvannamalai for Pournami, Girivalam and Karthigai Deepam. With the support of devotees, volunteers and well-wishers, our Annadhanam activities continue every month with care, dignity and devotion.
திருக்கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு அன்னதானம்
149 ஆவது மாதமாக திருக்கார்த்திகை தீபத் திருவிழா பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை ஒட்டி கிரிவலம் வந்த பக்தர்களுக்காக ஸ்ரீ அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து மூன்று நாட்கள் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
3,000 லட்டு, 2,000 பக்தர்களுக்கு சாப்பாடு, 4,000 பக்தர்களுக்கு சூடான பால், 3,000 பக்தர்களுக்கு சுண்டல் மற்றும் 3,000 பக்தர்களுக்கு சாம்பாருடன் இட்லி வழங்கி பக்தர்களின் பசியாற்றப்பட்டது.
13 ஆண்டுகளாக தொடரும் பௌர்ணமி அன்னதான சேவை
திருவண்ணாமலை அடிஅண்ணாமலை கிரிவலப்பாதையில் ஸ்ரீ அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கி வருகிறது.
பக்தர்களின் ஒத்துழைப்பும், சிவனடியார்களின் ஆதரவும், உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் பங்களிப்பும் இந்த தொடர்ச்சியான சேவைக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது.
ஒவ்வொரு பௌர்ணமியிலும் 6,000 பக்தர்களுக்கு அன்னதானம்
ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் மாலை 6:00 மணிக்கு தொடங்கி சுமார் 3,000 நபர்களுக்கு குருமாவுடன் வெஜிடபிள் சாதம் வழங்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு மேலும் 3,000 பக்தர்களுக்கு சாம்பாருடன் இட்லி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறது.
தீபத் திருவிழா சிறப்பு சேவை
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, கிரிவலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து பல்வேறு வகையான அன்னதான சேவைகள் வழங்கப்பட்டன.
பௌர்ணமி தின சேவை நடைமுறை
பக்தர்களுக்காக சுத்தமாகவும் சுகாதாரமான முறையிலும் உணவு தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது.
தேவைக்கேற்ப திட்டமிட்ட அளவில் உணவு தயாரித்து, உணவு வீணாக்கத்தை குறைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.
அன்னதானம் என்பது உணவு வழங்குவது மட்டுமல்ல; அன்புடனும் மரியாதையுடனும் பக்தர்களை சேவிப்பதே எங்கள் நோக்கம்.
முதியோர் இல்லங்களுக்கும் அன்னதான சேவை
பௌர்ணமி பக்தர்களுக்கான அன்னதானத்தைத் தவிர, ஸ்ரீ அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை சார்பில் முதியோர் இல்லங்களுக்கும் உணவு வழங்கும் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உணவின் மூலம் தேவையுடையவர்களைச் சேவிப்பதும், மனிதநேயத்தை வளர்ப்பதும் அறக்கட்டளையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
அறக்கட்டளையின் சேவைப் பயணம்
ஸ்ரீ அருணாச்சலா அன்னதான அறக்கட்டளையை இந்தியன் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதுநிலை மேலாளர் திரு. தியாகராஜன் அவர்கள் தொடங்கினார். ஓய்விற்குப் பின்னரும் சமூகத்திற்கும் கிரிவலம் வரும் பக்தர்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி இன்று பலரின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
2026 புத்தாண்டு தமிழ் காலண்டர் வழங்கல்
அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு 2026 புத்தாண்டை முன்னிட்டு தமிழ் காலண்டரை ஸ்ரீ அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை நிறுவனர் திரு. தியாகராஜன் அவர்கள் வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
எல்லோருக்கும் திருவண்ணாமலையில் அன்னதானம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்
நீங்களும் இந்த அரிய சேவை வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஸ்ரீ அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை மூலம் திருவண்ணாமலையில் அன்னதானம் செய்யலாம்.